கொரோனா தொற்றால் மருத்துவர் உயிரிழப்பு; மனைவி, குழந்தைக்கு பாதிப்பு !

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (18:02 IST)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  கொரோனா தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வந்த  ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தனியார் மருத்துவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவருக்கு நெல்லூரில் , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

இதில், அவருக்கும் கொரொனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நோயின் தீவிரம் அதிகமானதை அடுத்து, அவரை 10 நாட்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அம்பத்தூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை   கொரொனாவால் பாதிக்கப்பட்டு நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்