சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?
திங்கள், 9 மே 2022 (07:50 IST)
கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்ற நிலையை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 110,85 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 100.94 எனவும் விற்பனையாகி வருகிறது
சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
ஆனால் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காமல் உள்ளது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது