கொரோனா எதிரொலி: சென்னை-டெல்லி போட்டி ரத்தாகுமா?

ஞாயிறு, 8 மே 2022 (16:59 IST)
கொரோனா எதிரொலி: சென்னை-டெல்லி போட்டி ரத்தாகுமா?
டெல்லி வீரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இன்று டெல்லி-சென்னை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
ஐபிஎல் தொடரின் 55வது போட்டியான டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்னர் டெல்லி அணியின் பந்துவீச்சாளர் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் 
 
இந்த நிலையில் இன்றைய போட்டி சென்னை-டெல்லி போட்டி நடைபெறுமா? அல்லது இரு அணி வீரர்கள் அனைவருக்கும் பரிசோதனை சோதனை செய்யப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே டெல்லி அணியில் கடந்த சில நாட்களுக்கு முன் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்