#நான்தாப்பா_பைக்_திருடன்: பங்கமா கலாய் வாங்கும் ரஜினியை கலாய்த்த சந்தோஷ்!!

சனி, 22 பிப்ரவரி 2020 (10:34 IST)
சமூக வலைத்தளமான டிவிட்டரில் நான்தாப்பா பைக் திருடன் என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. 
 
தூத்துக்குடி போராட்டத்தின் போது வெடித்த கலவரத்தில் காயமடைந்த மக்களை மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது ரஜினி அவர்களை சென்று சந்தித்தார். அப்போது காயம்பட்ட சந்தோஷ் என்பவர் ரஜினியை பார்த்து யார் நீங்க என கேட்டார். 
 
அப்போது ரஜினி அதற்கு நான்தாப்பா ரஜினி என பதில் அளித்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. தற்போது ரஜினியை கேள்வி கேட்ட அந்த சந்தோஷ் பைக் திருடி போலீஸில் சிக்கிக்கொண்டுள்ளார் போலும், இதனால் டிவிட்டரில் #நான்தாப்பா_பைக்_திருடன் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்