விடுதலை செய்யப்படுவார்களா எழுவர்? – பிப்ரவரி 9ம் தேதி வழக்கு விசாரணை!

Webdunia
வியாழன், 4 பிப்ரவரி 2021 (12:28 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை குறித்த ஆளுனரின் முடிவு வெளியாகாத சூழலில் பிப்ரவரி 9ம் தேதி இந்த வழக்கு விசாரனைக்கு வருகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டது.

ஆளுனர் ஒப்புதல் தாமதமாகி வந்த நிலையில் ஆளுனர் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஆளுனர் தரப்பில் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இந்த வழக்கு தற்போது மீண்டும் பிப்ரவரி 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதற்குள்ளாக ஆளுனரின் முடிவுகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்