24 மணி நேரத்தில் அதிமுகவை நிராகரித்த ஒரு லட்சம் பேர்: மாஸ் காட்டும் ஸ்டாலின்

திங்கள், 21 டிசம்பர் 2020 (11:05 IST)
நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது என்பதும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக பேசினார் என்பதும் தெரிந்ததே 
 
மேலும் ’அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற இணையதள பிரச்சாரத்தையும் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் நேற்று அதிமுகவை நிராகரிக்கிறோம் என்று தொடங்கி வைத்த பிரச்சாரத்தில் 24 மணி நேரத்தில் ஒரு லட்சம் பேர் அதிமுகவில் நிராகரித்ததாக இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் 
 
இதனால் அதிமுகவுக்கு எதிராக முக ஸ்டாலின் எடுத்த இந்த நடவடிக்கை மாஸாக இருப்பதாக சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பிரச்சாரத்தில் இன்னும் அதிகமான பேர் பதிவு செய்து வருவதாகவும் தேர்தல் நெருங்குவதற்குள் இதன் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்