இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிரடி: 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!

Mahendran

வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (17:46 IST)
இந்திய தேர்தல் ஆணையம், விதிகளை பின்பற்றாத மேலும் 474 பதிவுசெய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை நீக்கியுள்ளது. தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத கட்சிகள் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன.
 
ஆகஸ்ட் 9 அன்று 334 அங்கீகரிக்கப்படாத கட்சிகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் எண்ணிக்கை 2,520-லிருந்து 2,046 ஆக குறைந்துள்ளது.
 
தற்போது, இந்தியாவில் 6 தேசிய கட்சிகளும் 67 மாநிலக் கட்சிகளும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்