நாளை முதல் தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகும் நிலையில் அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பை குறைக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகங்களும் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் நாளை கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு இனி வரும் காலங்களில் அரசு எடுக்கின்ற முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.