பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: பொதுமக்களை நேரில் சந்தித்த பாமக தலைவர்கள்!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (15:00 IST)
ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அந்த பகுதி மக்கள் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
 
மத்திய மாநில அரசுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை செய்துவரும் நிலையில் எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை பாமக தலைவர்கள் நேரில் சந்தித்து காரணங்களை கேட்டறிந்தனர் 
 
பாமக தலைவர் அன்புமணி, முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி, முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பொதுமக்களை நேரில் சந்தித்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் பொதுமக்களிடம் காரணங்களைக் கேட்டு அறிந்தனர். இதனை அடுத்து பாமக கட்சியை இது குறித்து முடிவு செய்யும் என்றும் கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்