கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு கூடிய கூட்டம் - எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி

திங்கள், 9 ஜூலை 2018 (14:38 IST)
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சமூக உறவுகள் வசிக்கும் கொங்கு மண்டலத்தில் தினகரனின் பொதுக்கூட்டத்திற்கு கூடிய கூட்டம் அதிமுக தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கொங்கு மணடலமான கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் பல வருடங்களாகவே அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. தேர்தல்களில் அதிமுகவே தொடர்ந்து வெற்றி பெற்றும் வருகிறது.
 
முதல்வர் மட்டுமில்லாமல் அவருக்கு மிகவும் நெருக்கமான அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன் என  அனைவரும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள்தான்.
 
இப்படி அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தின் தினகரன் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு கூடிய கூட்டம் அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
தற்போது தினகரன் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இரட்டை இலைக்கு கிடைக்கும் ஓட்டுகளை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
 
சமீபத்தில் கோவையில் அமுமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்