உச்ச நீதிமன்றத்தில் வழக்கு - ஓபிஎஸ் தரப்புக்கு செக் வைக்கும் தினகரன்

செவ்வாய், 26 ஜூன் 2018 (17:28 IST)
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

 
2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியபோது ஒபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் எதிராக வாக்களித்தனர்.
 
கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 
 
ஆனால்,  சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதனால், ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவி தப்பியது.
 
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்