கொரோனாவுக்கு பலியான முன்னாள் அமைச்சர்: அதிர்ச்சி தகவல்

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:11 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. இந்தியாவில் சற்று முன் வெளியான தகவலின்படி பேர் கொரோனாவால் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட பல முக்கிய விஐபிகளும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒரு சிலர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் கொரோனாவுக்கு பலியானது பெரும் அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்
 
இந்த நிலையில் ஆந்திராவில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கொரோனாவால் பலியாகியுள்ள தகவல் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாணிக்கயாள்  ராவ்என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு வந்து 2018 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தவர். இவருக்கு சமீபத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் 
 
கடந்த 15 நாட்களாக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போது திடீரென அவருக்கு ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
 
ஆந்திராவில் ஏற்கனவே தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆந்திர முன்னாள் அமைச்சர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்