குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும்தான் வீடு!: விளம்பரத்தால் அதிர்ச்சியான மக்கள்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (19:41 IST)
திருச்சியில் நாளிதழில் வெளியான ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வீடுகள் விற்கப்படும் என விளம்பரப்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘இப்பவெல்லாம் யார் சார் சாதி பாக்குறா?’ என்று கேட்டுவிட்டு கடந்து போகும் இந்த காலத்திலும் மறைமுகமாக பல்வேறு வகையான சாதிய பாகுபாடுகள் இருக்கதான் செய்கின்றன. வாடகை வீடுகளில் குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வீடு என்று போர்டு மாட்டுவது போல, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அபார்ட்மெண்டுகள் விற்பனைக்காக தினசரி நாளிதழில் ஒரு விளம்பரம் வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டுமே விற்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி சிலர் இது தீண்டாமையை மறைமுகாமாக வளர்ப்பது போல உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்