அரிவாள் வெட்டில் முடிந்த பென்சில் தகராறு! 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!

Prasanth Karthick

புதன், 16 ஏப்ரல் 2025 (08:45 IST)

திருநெல்வேலியில் சக மாணவனை அரிவாளால் வெட்டிய 8ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 8ம் வகுப்பு மாணவன் ஒருவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக பென்சில் யாருடையது என இருவருக்கும் எழுந்த சண்டையில் பகை வளர்ந்த நிலையில் அரிவாளை பையில் வைத்து எடுத்து வந்து மாணவன், சக மாணவனை வெட்டியுள்ளார். அதை தடுக்க சென்ற ஆசிரியருக்கும் சில இடங்களில் வெட்டு விழுந்துள்ளது.

 

வெட்டப்பட்ட மாணவனும், ஆசிரியரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளனர். இதற்கிடையே அரிவாளால் வெட்டிய மாணவன் பள்ளியை விட்டு வெளியேறி தானே காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளான். 

 

தமிழ்நாட்டையே இந்த சம்பவம் அதிர வைத்துள்ள நிலையில் இந்த வழக்கில் 8ம் வகுப்பு மாணவனை 14 நாட்கள் சீர்திருத்த குழுமத்தில் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவனுக்கு கவுன்சிலிங் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாணவன் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்