மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

Siva

வெள்ளி, 1 ஆகஸ்ட் 2025 (11:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை குறைந்துள்ளதாகவும் இன்னும் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு 20 ரூபாயும் ஒரு சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம் போலவே வெள்ளி விளையும் ஒரு கிலோவுக்கு ரூ 2000 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,170
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,150
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,360
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,200
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 10,003
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,981
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 80,024
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  79,848
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.123.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.123,000.00
 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்