அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
அதிமுக கட்சியில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இடையே உட்கட்சி மோதல் நிலவி வந்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கியதோடு, அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி பொதுச்செயலாளராகவும் பதவியேற்றுக் கொண்டார். தற்போது சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தல் பணிகளில் இறங்கியுள்ளார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்றது செல்லாது என்று அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது, எடப்பாடியார் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமியின் பதவி பறிப்போகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
Edit by Prasanth.K