ஒற்றை நபருக்காக ஒட்டுமொத்த நோயாளிகளை தவிக்கவிட்ட மனிதநேயமற்ற மருத்துவர்கள்

Webdunia
வியாழன், 16 மார்ச் 2017 (19:13 IST)
மருத்துவர்கள் மீதான தாக்குதலால் மருத்துவ மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 

 
சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டதாக கூறி பயிற்சி மருத்துவ மாணவர்கள் கடந்த 2 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அவரச பிரிவு மற்றும் மருத்துவமனை நோயாளிகள் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கூறி மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நோயாளிகள் மற்றும் நோயாளியின் உறவினர்கள் மருத்துவமனை உள்ளே மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் அனைவரும் மருத்துவமனை வாயிலிலே நின்று கொண்டிருக்கின்றனர். 
 
மேலும் நோயாளின் உறவினர்கள் மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மருத்துவர்களின் இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
அடுத்த கட்டுரையில்