ஐபிஎல் தொடரில் வாய்ப்பு மறுக்கப்பட்ட ஸ்ரீசாந்த்!

வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (15:09 IST)
இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பு ஐபிஎல் ஏலத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் ஆக்ரோஷமாக செயல்படும் வீரர்களில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசாந்த். இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற 2007 மற்றும் 2011 ஆகிய இரு தொடர்களிலும் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சொல்லி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டார். அதன் பின் சட்ட ரீதியாக பல போராட்டங்களை நடத்தி 7 ஆண்டுகாலமாக அதை குறைத்தார். இப்போது அவரது தண்டனைக் காலம் செப்டம்பர் மாதத்தோடு முடியும் நிலையில் உடல்தகுதியை நிரூபித்தால் அவர் கேரள ரஞ்சி அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடருக்காக தனது பெயரை அவர் பதிவு செய்திருந்தார். சென்னையில் வரும் 18 ஆம் தேதி நடக்க உள்ள ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சத்தேஸ்வர் புஜாரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்