டெலிகிராம் செயலி மூலம் தூத்துக்குடி இளைஞரிடம் மோசடி: ரூ.21 லட்சம் பறிபோனது எப்படி?

Mahendran
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (19:48 IST)
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கு, இணையதளத்தில் பகுதி நேர வேலை வாய்ப்பு என டெலிகிராம் செயலியில் ஒரு மர்ம நபர் மூலம் ஒரு லிங்க் வந்தது. அந்த லிங்கை கிளிக் செய்து, அவர் அதில் கூறிய இணையதளத்தில் முதலீடு செய்து, முதலில் சிறிய தொகையை லாபமாக பெற்றார்.
 
அதிக முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அந்த நபர்கள் தொடர்ந்து கூறியதினால், இளைஞர் பல தவணைகளாக அவர்களுக்கு 16 வங்கி கணக்குகளில் மொத்தம் ரூ.21.07 லட்சத்தை அனுப்பினார். ஆனால், இந்த பணத்திற்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த மோசடி நபர்களை தொடர்பு கொண்டபோது, மேலும் ரூ.15 லட்சம் கட்டினால் முழு லாபம் கிடைக்கும் என அவர்கள் கூறினர்.
 
அதன்பின்னர் தான் இது மோசடி என்பதை உணர்ந்த இளைஞர் உடனடியாக சைபர் குற்றவியல் இணையதளத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார், உதவி திடீர் உதவி கண்காணிப்பாளர் சகாய ஜோஸ் தலைமையில், ஆய்வாளர் சோமசுந்தரம் வழிகாட்டியுடன் விசாரணை நடத்தினர்.
 
முதல் கட்ட விசாரணையில் இளைஞர் அனுப்பிய பணம் 16 வங்கி கணக்குகளில் இருந்தது கண்டறியப்பட்டது. ரூ28,22,141 ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டிருந்தது, அதில் ரூ.3.23 லட்சம் வங்கி கணக்குக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
 
மீதி பணத்தை மீட்கவும், மோசடி நபர்களை கைது செய்யும் நடவடிக்கையும் சைபர் குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்