பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் பெற்றோர் தான் பொறுப்பு: பள்ளிக்கல்வித்துறை

புதன், 27 ஜூலை 2022 (19:44 IST)
பள்ளிச் சொத்துக்களை மாணவர் சேதம் செய்தால் அவருடைய பெற்றோர் தான் பொறுப்பு என தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர் என்பதும் இதனால் அந்த பள்ளிக்கு பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பள்ளி சொத்துகளுக்கு ஒரு மாணவரால் சேதம் விளைவித்தால் அந்த மாணவரின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர் பொறுப்பு என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது 
 
சேதமடைந்த பள்ளிச் சொத்துக்களை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் மாற்றி தர வேண்டும் என்றும் அடுத்தடுத்து தவறு செய்தால் ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்