குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் தெரிந்துக்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன...?

செவ்வாய், 26 ஜூலை 2022 (18:06 IST)
குழந்தைகளின் மன வளர்ச்சி, மனப்போக்கில் மாற்றம் அதிகம். குழந்தைகளும் இயற்கையாகவே 4-5 வயதில் தன்னை காயப்படுத்தும் நபரை எதிர்க்கவோ, அடிக்கவோ, தன் எதிர்ப்பினை எதாவது ஒரு முறையில் காட்டவோ செய்வார்கள்.


முக்கியமாக, குழந்தைகள் அடிக்க, அடிக்க குழந்தைகள் சண்டியாக மாறுவார்கள். சண்டித்தனம் அதிக மூர்க்கத்தனமாக மாறும். அதீத இயக்கம், கோபம், வெறுப்பு, கெட்ட செயல்கள், கெட்ட எண்ணங்கள், கெட்ட சேர்கையிலும் கெட்ட செயலிலும் கொண்டு செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் குழந்தை தெரியாமல் தன்னைத் திருப்பி அடித்து விட்டால் நிம்மதியாக இருக்க முடியுமா? அது மிக கொடுமை. அடிப்பது என்பது குற்றம். வன்முறை என்றைக்குமே தீர்வாகாது. நல்வழிப்படுத்த அன்பும் அக்கறையும் அரவணைப்பும் புரிதலுமே மிகவும் முக்கியம்.

எந்த காரணமோ எந்த சூழலோ பெற்றோர் குழந்தைகளை அடிப்பது சரியான முடிவாக இருக்காது. ஒரு குழந்தை ஒரு தவறை செய்தால், அந்த குழந்தையிடம் பேசாமல் இருப்பது, கொஞ்சாமல் இருப்பது என என்ன குழந்தையின் பலவீனமோ அதை நோக்கி நீங்கள் சிறிய தண்டனை வழங்கி குழந்தையை திருத்தவேண்டும். இப்படி செய்வியா என நன்றாக அடி அடித்துவிட்டு, ஒரு மணி நேரமோ அடுத்த நாளோ குழந்தையை தூக்கி கொஞ்சுவதில் ஒரு பயனும் இல்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்