அந்த அணிவகுப்பை போலவே கோவையில் இம்முறை நடத்த ஆயுதப்படை போலிசார் முடிவு செய்துள்ளனர். கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் ல் முதன்முறையாக வாஹா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பை போலவே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீவிர பயிற்சியில் கோவை மாநகர ஆயுதப்படை போலிசார் ஈடுப்பட்டுள்ளனர்.