தனியார் வங்கி பெண் ஊழியரின் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு - தீயணைப்புத்துறை வீரர்கள் சதுர்யமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்!

J.Durai

சனி, 12 அக்டோபர் 2024 (10:12 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் வங்கி ஊழியராக பணியாற்றும் பெண்ணின் இருசக்கர வாகனத்தில் ( ஸ்கூட்டி ) சுமார் 2 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பு புகுந்துள்ளது.
 
இன்று பேரையூர் ரோட்டில் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தை இயக்கி கொண்டு வரும் போது வாகனத்திலிருந்து வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர் வாகனத்திலிருந்து குழந்தைகளுடன் கீழே விழுந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
 
காயம் ஏதும் ஏற்படாத சூழலில், தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் காவல்துறையினர், இருசக்கர வாகனத்திற்குள் இருந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
 
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேரையூர் சாலையில் இருசக்கர வாகனத்திற்குள் பாம்பு புகுந்த சம்பவத்தால் ஏராளமான மக்கள் கூடினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்