14 மாவட்டங்களுக்கு இன்று மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

சனி, 12 அக்டோபர் 2024 (09:49 IST)

வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழகத்தின் சில பகுதிகளில் கடந்த சில வாராங்களாகவே ஆங்காங்கே மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று அடுத்த சில மணி நேரங்களில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர்,செங்கல்பட்டு, கரூர், திண்டுக்கல், கன்னியாக்குமரி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்