தரமற்ற பள்ளிக் கட்டிடங்களை இடிக்க உத்தரவு! – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Webdunia
வெள்ளி, 17 டிசம்பர் 2021 (16:36 IST)
திருநெல்வேலியில் தனியார் பள்ளி கழிப்பறை கட்டிடம் இடிந்து மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளது.

நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் இதுவரை மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.10லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள கட்டிடங்களின் தரத்தை ஆராய குழு அமைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள தரமற்ற மற்றும் உபயோகிக்கப்படாத கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்