பழனி தியேட்டர் அதிபரின் துப்பாக்கி சூடு: ஒருவர் பலியானதால் பரபரப்பு!
பழனி அருகே தியேட்டர் அதிபர் ஒருவர் நேற்று திடீரென துப்பாக்கியை எடுத்து வந்து மூவரை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பழனி அருகே 12 சென்ட் நிலம் தொடர்பாக தியேட்டர் அதிபர் ஒருவருக்கும் அவருடைய பக்கத்து வீட்டில் உள்ள இன்னொருவருக்கும் தகராறு இருந்துள்ளது. நேற்று இந்த தகராறு குறித்து இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென தியேட்டர் அதிபர் துப்பாக்கியை எடுத்து மூவர் மீதும் சுட்டார் இதில் இருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து சிகிச்சையில் இருக்கும் இருவரிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன்பின்னர் தியேட்டர் அதிபர் நடராஜன் கைது செய்யப்பட்டார். நடராஜன் தனது துப்பாக்கிக்கு முறையான உரிமம் வைத்து இருக்கிறார் என்றாலும் அவரை கைது செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
இந்த நிலையில் தியேட்டர் அதிபர்கள் சுடப்பட்ட சம்பவத்தில் தற்போது சிகிச்சையின் பலன் இன்றி ஒருவர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தியேட்டர் உரிமையாளர் சுட்டதில் காயமடைந்த சுப்பிரமணி என்பவர் சிகிச்சையின் பலன் இன்றி சற்றுமுன் பலியானதாகவும் இதனை அடுத்து தியேட்டர் உரிமையாளர் மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது