வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி! உறுதி செய்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Siva
திங்கள், 14 அக்டோபர் 2024 (12:23 IST)
வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை உறுதி செய்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும், அதன் பின்னர் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுவை, பிறகு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக, சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அக்டோபர் 18ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 14, 15, 16 ஆகிய மூன்று தினங்களில் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்