ஏர் இந்தியாவை அடுத்து இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (12:18 IST)
ஏர் இந்தியா விமானத்திற்கு கடந்த சில மணிநேரங்களுக்கு முன்பு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து தற்போது இண்டிகோ விமானங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமான பயணிகள்  மத்தியில் பரபரப்பு நிலவி இருக்கிறது.

நேற்று இரவு, மும்பையில் இருந்து நியூயார்க் நோக்கி செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்  வந்தது. இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாக டெல்லிக்கு திரும்பச் செய்து, முழுமையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், இண்டிகோ விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை நகரத்தில் இருந்து மஸ்கட் மற்றும் ஜெட்டா செல்லும் இரண்டு விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த விமானங்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு விமானத்தின் முழு பகுதி சோதனை செய்யப்பட்டது.

சோதனை முடிந்த பிறகு, வெடிகுண்டு மிரட்டல் என்பது உறுதியானது. இந்த சம்பவத்தால் பயணிகள் மிகவும் பதற்றத்தில் உள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்