புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

Siva

வியாழன், 31 ஜூலை 2025 (08:06 IST)
உத்தரப்பிரதேசத்தில், புறாக்களின் கால்களில் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகளை கட்டிப் பறக்கவிட்டு, அவற்றை ட்ரோன்கள் என வதந்தியைப் பரப்பியதாக கூறி இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக உத்தரப்பிரதேச மாவட்டத்தின் பல கிராமங்களில், மர்மமான 'ட்ரோன்கள்' காணப்படுவதாக மக்கள் மத்தியில் அச்சம் கிளம்பியுள்ளது. பச்சை மற்றும் சிவப்பு விளக்குகளுடன் வானில் பறக்கும் இந்தப் பொருட்கள் ட்ரோன்கள் என அஞ்சி, பல கிராம மக்கள் இரவில் தூங்காமல் இருந்தனர்.
 
இந்த நிலையில், இந்த விவகாரத்திற்கு தற்போது ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணையில், ஷோயப் மற்றும் சகிப் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இளைஞர்கள், புறாக்களின் கால்களில் பச்சை மற்றும் சிவப்பு விளக்குகளைக் கட்டிப் பறக்கவிட்டதாகவும், அதன் பின்னரே ட்ரோன்கள் பறப்பதாக வதந்தியை பரப்பியதாகவும் தெரிய வந்தது.
 
இதையடுத்து, ஷோயப் மற்றும் சகிப் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கைது நடவடிக்கையால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்பும், கிராம மக்கள் மத்தியில் இருந்த அச்சமும் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்