தேர்தல் தோல்வி கொடுத்த பாடம்.. ஈபிஎஸ், சசிகலா, தினகரன், ஓபிஎஸ் இணைவார்களா?

Siva

புதன், 5 ஜூன் 2024 (14:01 IST)
2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது மட்டுமின்றி கிட்டத்தட்ட 10 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. பல இடங்களில் பாஜக இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்பதும் சில இடங்களில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பெற்று அதிமுகவை நான்காவது இடத்திற்கு பின்னுக்கு தள்ளி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த அளவுக்கு அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் கூட்டணி சரியாக அமையாது என்பதும் பாஜக மற்றும் பாமகவை எடப்பாடி பழனிச்சாமி கூட்டணியில் இணைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.. 
 
அது மட்டும் இன்றி அதிமுகவின் வாக்குகள் பிரிந்து உள்ளது என்றும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர்களை அதிமுகவில் மீண்டும் இணைத்துக் கொண்டு ஒருங்கிணைந்த அதிமுகவாக இருந்தால் மட்டுமே அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் ஆகியோர்களை அதிமுகவுக்குள் இணைத்தால் கட்சி தன் கையை மீறி சென்று விடும் என்றும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலை வரும் என்றும் கூறப்பட்டு வருவதால் எடப்பாடி பழனிச்சாமி யோசித்து வருவதாக கூறப்படுகிறது. 
 
மொத்தத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை மீட்டெடுக்க சரியான வழியை தேர்வு செய்யவில்லை என்றால் அதிமுக வருங்காலத்திலும் இன்னும் அதிக வீழ்ச்சியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்