சசி அணிக்கு ஓபிஎஸ் வைத்த அடுத்த ஆப்பு: தலைமை அலுவலகத்தை பயன்படுத்த தடை!

Webdunia
வியாழன், 23 மார்ச் 2017 (09:25 IST)
அதிமுகவின் தலைமை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ளது. இதனை ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் தொடர்ந்து அதிமுகவின் சசிகலா அணியினர் பயன்படுத்தி வந்தனர். தற்போது இதற்கு தடை விதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ்.


 
 
ஆர்கே நகர் தேர்தலையொட்டி அதிமுகவின் இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்ற பஞ்சாயத்து தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. இதில் இரு அணியினரும் இந்த தேர்தலில் இரட்டை இலையை பயன்படுத்த கூடாது என தற்காலிக தடையை விதித்தது தேர்தல் ஆணையம்.
 
இரு அணியினருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், இது அதிமுகவின் சசிகலா அணிக்கு தான் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் சசிகலா அணியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவருவதற்குள் சசிகலா அணிக்கு எதிராக அடுத்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது ஓபிஎஸ் அணி.
 
இதுவரை சசிகலா அணி பயன்படுத்து வந்த அதிமுக தலைமை அலுவலகத்தை இனிமேல் அவர்கள் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை தேர்தல் ஆணையத்திடம் இன்று அளிக்க உள்ளனர் ஓபிஎஸ் அணியினர். சில தினங்களுக்கு முன்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக பேசிய நிர்மலா பெரியசாமி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
 
அவரை கட்சியிலிருந்து வெளியேற சசிகலா அணியில் உள்ளவர்கள் கூறினர். இந்நிலையில் சசிகலா அணியினர் அதிமுக தலைமை அலுவலகத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தேர்தலை ஆணையத்தை நாட உள்ளனர் ஓபிஎஸ் அணியினர்.
அடுத்த கட்டுரையில்