ஸ்டாலினுடன் ஒரே மேஜையில் ஓபிஸ்… ஆளுனரின் தேநீர் விருந்து புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 7 மே 2021 (12:01 IST)
தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து ஆளுநர் தேநீர் விருந்து அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பதவியேற்பு விழா முடிந்ததும் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது ஆளுநர், ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் அமர்ந்து தேநீர் அருந்தினார். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்திப்பதைக் கூட தவிர்த்துக்கொள்ளும் நிலையில் இந்த புகைப்படம் அரசியல் நாகரிகத்தை இருவரும் வெளிப்படுத்தியதாக பாராட்டப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்