வரும் தேர்தலில் திமுக தோற்பது நிச்சயம்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (12:19 IST)
வரும் தேர்தலில் திமுக தோற்பது நிச்சயம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறிய போது, ‘ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கும் திமுக-விற்கு கடும் கண்டனம் தெரிவிக்கின்றேன்.
 
‘விடியலை நோக்கி’ என்று மேடைக்கு மேடை தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., இன்று தமிழ்நாட்டு மக்களை ‘விரக்தியை நோக்கி’ அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது; வரும் தேர்தலில் திமுக தோற்பது நிச்சயம்;
 
 சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வழிகாட்டி மதிப்பு உயர்வு, பதிவு கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு கட்டுமான பொருட்கள் உயர்வு விலை உயர்வு என பலமுறை தாக்குதலுக்கு பொதுமக்கள் ஆளாகி விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்
 
அரசனின் கொடுமை தாங்காமல் மக்கள் வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அகற்றும் ஆயுதமாகும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, திமுக ஆட்சி அகற்றப்படும்"
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்