மீண்டும் தர்மயுத்தம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (08:22 IST)
மீண்டும் தர்மயுத்தம் நடத்தி வருகிறோம் என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக கடந்த சில மாதங்களாக இரண்டு பிரிவுகளாக இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமி வசம் சென்று விட்டது. சமீபத்தில் அவர் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் அனைத்து அதிகாரங்களும் அவர் கீழ் வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தனது அணிக்கு அங்கீகாரம் கிடைக்க சட்ட போராட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திருச்சியில் முப்பெரும் மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஓ பன்னீர்செல்வம் பேசினார்.
 
அப்போது நாம் மீண்டும் தர்மயுத்தம் தொடங்கிவிட்டோம் என்றும், இந்த தர்மயுத்தம் எந்தவித பிசையிறும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு மக்கள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தர்ம யுத்தத்தில் நாம் தான் வெற்றி அடையப் போகிறோம் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்