அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் படங்களும் அகற்றம்!

புதன், 20 ஜூலை 2022 (20:47 IST)
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் படங்களும் அகற்றம்!
அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த அனைத்து ஓபிஎஸ் புகைப்படங்களும் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
அதிமுக தலைமை அலுவலகம் சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் இன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க உத்தரவிடப்பட்டது 
 
இதனை அடுத்து அதிமுக அலுவலகத்தில் உள்ள அனைத்து ஓபிஎஸ் புகைப்படங்களை அகற்றப்பட்டதாகவும், ஈபிஎஸ் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் படங்கள் மட்டுமே தற்போது அதிமுக அலுவலகத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
இதனை அடுத்து அதிமுகவை முழுவதுமாக ஓ பன்னீர்செல்வம் இழந்து விட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்