தமிழகம் முழுவதும் புதிய மாவட்ட செயலாளர்கள்: ஈபிஎஸ் அடுத்த அதிரடி
புதன், 20 ஜூலை 2022 (14:53 IST)
தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படுவார்கள் என்றும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறி வருவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது
இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.