விரக்தியில் ஓபிஎஸ்: அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2017 (14:57 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் மரணத்தை ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் சசிகலா அணிக்கு எதிராக வைத்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


 

 
 
மேலும் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை மேல் சிகிச்சைக்கு சிங்கப்பூரோ, அமெரிக்காவோ அழைத்து செல்ல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கூறியதாகவும், அதற்கு விஜயபாஸ்கர் வேண்டாம் என கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இடைத்தேர்தல் என்பதால் ஓபிஎஸ் தவறான குற்றச்சாட்டுகளை வைக்கிறார், இதனை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சிகிச்சை பற்றி அப்போது ஆளுநர், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடுவிடம் கூறியிருக்கலாமே என்றார்.
 
மேலும் ஓபிஎஸ், பதவியில்லை என்ற விரக்தியிலும், ஆர்கே நகர் தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்திலும் ஒருவித குழப்பத்தில் உள்ளார் என கூறினார் விஜயபாஸ்கர்.
அடுத்த கட்டுரையில்