நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு தர்ம யுத்தம் புகழ் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் பதில் அளிக்காமல் நழுவியுள்ளார்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீட் தேர்வு மற்றும் மத்திய மாநில அரசுகள் தான் காரணம் என மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பலரும் குற்றம் சட்டுகின்றனர். இதனையடுத்து மாணவர்கள் தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் இடம் நேற்று பத்திரிகையாளர்கள் மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் தற்கொலை செய்துகொண்டது குறித்து கேள்வி எழுப்பினார். ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு தர்ம யுத்தம் நடத்துவதாக ஊடகங்கள் முன்னர் சில மாதங்களாக முழங்கிய ஓபிஎஸ், ஏழை மாணவியின் மரணம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் கிளம்பியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.