இப்படியே கட்டணத்தை உயர்த்தினால்…? – தேர்வு கட்டணம் உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

Webdunia
ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (10:58 IST)
தமிழகத்தில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் வரி உயர்வு முடிவிற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வு கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்பட உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் பிற பல்கலைகழகங்களும் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்