இந்த ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை! – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (09:18 IST)
தமிழகத்தில் காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை என்று தமிழக எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஆடு திருடர்களால் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது, வாகனம் மோதி காவலர் ஒருவர் உயிரிழந்தது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அதுமுதலாகவே தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் காவல்துறை செயல்பாடுகள் குறித்தும், அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்து கொண்டே வருகிறது. திமுக ஆட்சியில் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை. திமுக அரசு அதிகாரிகள் காவல்துறையினரை மிரட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்