நான் பதவியை ராஜினாமா செய்ய தயார், நீங்கள் தயாரா? ஈபிஎஸ்-க்கு ஓபிஎஸ் சவால்!

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:02 IST)
நான் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் அதே போல் நீங்களும் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்று ஓபிஎஸ் இபிஎஸ்க்கு சவால் விடுத்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவர் பிரிவில் அதிமுக உள்ளது என்பதும் இருவரும் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் திடீரென இன்று ஓபிஎஸ், இபிஎஸ்க்கு சவால் விடுத்துள்ளார். நான் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் நீங்களும் உங்களுடைய பதவியை ராஜினாமா செய்ய தயாரா? என்றும் இருவரும் ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்திப்போம் என்றும் தேனியில் தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியுள்ளார்
 
அவரது இந்த சவால் இபிஎஸ் தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்