12 மணி நேரம் வேலை.. எதிர்ப்பு தெரிவித்து மே 12ல் தமிழகம் முழுவதும் போராட்டம்..!

Webdunia
ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (17:01 IST)
தமிழக சட்டமன்றத்தில் சமீபத்தில் 12 மணி நேர வேலை குறித்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பதும் இதற்கு ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது போராட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளன. 
 
12 மணி நேர வேலை சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி மே 12ஆம் தேதி தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். 
 
சிஐடியு, ஏஐசிஐடியூ உள்ள ஆகிய தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் போராட்டம் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 27ஆம் தேதி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்