சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ்-ன் தம்பி… அரசியல் சந்திப்பா?

Webdunia
சனி, 5 மார்ச் 2022 (09:02 IST)
சசிகலா ஆன்மிக சுற்றுலாவாக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்ற போது அவரை ஒபிஎஸ்-ன் தம்பி ராஜா சென்று சந்தித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முதலில் ஓபிஎஸ் தனியணியாக செல்ல, அதன் பின்னர் ஓபிஎஸ்-ம் ஈபிஎஸ்-ம் இணைந்து தனி அணியாக சசிகலா புறக்கணிக்கப்பட்டார். தண்டனைக் காலத்தை சிறையில் கழித்து வந்த பின்னர் அவர் மீண்டும் கட்சியில் சேருவாரா என்ற கேள்வி எழுந்தது.

ஒரு தரப்பினர் அவர் சேர வேண்டும் என்றும் மற்றொரு தரப்பினர் அவரை சேர்க்கக் கூடாது என்றும் குரல் எழுப்பி வந்தனர். இதில் மெல்ல மெல்ல ஓபிஎஸ் சசிகலா ஆதரவாளராக மாறி வருவதாக சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலின் தோல்விக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் மீண்டும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் திருச்செந்தூரில் கோயிலுக்கு சென்ற போது அவரின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ ராஜா சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்