தமிழக அரசின் ஆட்டோ புக்கிங் செயலிக்கு எதிர்ப்பு! – என்ன காரணம்?

சனி, 28 அக்டோபர் 2023 (14:08 IST)
தமிழக அரசு உருவாக்கியுள்ள ஆட்டோ புக்கிங் செயலிக்கு ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ஓட்டுனர்களும், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் உள்ள நிலையில், சமீபமாக ஆன்லைன் ஆட்டோ புக்கிங் செயலிகளால் தங்கள் வருமானம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் கூறி வருகின்றனர். தனியார் ஆட்டோ புக்கிங் செயலிகளில் பல ஆட்டோ ஓட்டுனர்கள் ஒப்பந்தம் செய்து ஆட்டோ ஓட்டி வந்தாலும் அதில் கிடைக்கும் பணத்தில் செயலிகள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகை அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது.

இதனால் தமிழ்நாடு ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் ஆட்டோ புக்கிங் செய்ய தமிழக அரசே ஒரு புது செயலியை உருவாக்க வேண்டும் என்றும், அதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வசூல் முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். அதன்படி தமிழக அரசு ”TATO” என்ற புதிய செயலியை உருவாக்கியுள்ளது. ஆனால் இதை தமிழக அரசு தனியார் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளதாக இந்த செயலிக்கு ஆட்டோ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் மூலம் கொண்டு வரும் செயலியை ஏற்க முடியாது என்றும், ஆட்டோ பயணத்துக்கான செயலியை அரசே உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்