இன்று பகுதி சந்திர கிரகணம்: கோவில்களில் தரிசன நேரம் மாற்றம்!

சனி, 28 அக்டோபர் 2023 (12:34 IST)
இன்று இந்த இரவு இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் தொடங்கும் நிலையில் கோவில்களில் வழிபாட்டு நேரம் மாற்றப்பட்டுள்ளது.



இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை நள்ளிரவின் 3 மணி வரை தொடர உள்ளது. பொதுவாக கிரகண சமயத்தில் கோவில் நடைகள் சாத்தப்படும் என்பதால் கோவில் வழிபாட்டு நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருப்பதி ஏழுமலையான் இன்று இரவு 7.05 மணி முதல் 29ம் தேதி அதிகாலை 3.15 வரை நடை சாத்தப்படுகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் இன்று மாலை 5 மணி சாயரட்சை பூஜை முடிந்ததும் நடை மூடப்பட்டு நாளை காலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
பழனி முருகன் கோவிலில் இன்று இரவு 8 மணிக்கும், திருப்பரங்குன்றம் கோவிலில் இன்று இரவு 7 மணிக்கும் நடை மூடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோபிலில் இன்று மாலை 5.30 மணிக்கே நடை மூடப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்குதான் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்