இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

Mahendran

சனி, 22 மார்ச் 2025 (11:04 IST)
சென்னை கிண்டியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஒருங்கிணைந்த நடவடிக்கை குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய உரையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
 
மொழிகள் மற்றும் இனங்கள் பலவற்றைக் கொண்ட பல மாநிலங்களிலிருந்து நாம் அனைவரும் ஒன்றாகக் கூடியுள்ளோம்.
 
கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை கொள்கைகளை பாதுகாக்க, தலைவர்கள் ஒற்றுமையாகக் கூடும் இந்நாள், வரலாற்றில் முக்கியத்துவம் பெறக்கூடியதாக இருக்கும்.
 
இந்திய கூட்டாட்சியை காப்பாற்றும் மிக முக்கிய நாளாக, இந்த நாள் வரலாற்றில் இடம் பெறும்.
 
இந்தியாவின் அரசியல் வரலாற்றில், ஒரு கட்சியின் அழைப்புக்கு பல கட்சிகள் இணைந்து திரள்வது சிறப்பு வாய்ந்ததாகும்.
 
ஜனநாயகத்தின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, நாம் அனைவரும் ஒருமித்த அணியாக திரண்டுள்ளோம் என்பதையே உங்கள் வருகை உறுதிப்படுத்துகிறது.
 
மாநிலங்கள் தன்னாட்சி உரிமையுடன் செயல்பட்டால் மட்டுமே கூட்டாட்சி அமைப்பு வலுவாக இருக்கும்.
 
தொகுதி மறுசீரமைப்பு, நமது மாநிலங்களை பெரிதும் பாதிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதற்கு தீவிர எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்.
 
தற்போதைய மக்கள்தொகையை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறையை ஏற்க முடியாது.
 
மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடைந்தால், மக்களின் உரிமைகளுக்கான குரலும் மங்கிவிடும்.
 
மணிப்பூர் மக்களின் கோரிக்கைகளை கேட்க, மத்திய அரசு இன்னும் தயார் நிலைக்கு வரவில்லை.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்