ஆளும் கட்சி கூட்டணியில் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்: மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்..!

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2023 (14:01 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீரென எதிர்க்கட்சி தலைவர் ஆளும் கட்சியின் கூட்டணியில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்த ஷிண்டேவின் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவராக அஜித் பவர் என்பவர் இருந்தார் என்பதும் இவர் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவர் ஆளும் பாஜக சிவசேனா கூட்டணியில் திடீரென இணைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
அதுமட்டுமின்றி தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உடன் ஆளுநரை அவர் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மாநில அரசியலில் நடந்த இந்த திருப்பம் காரணமாக அம் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்