சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை: ரயில்வே அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (18:17 IST)
தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று ’சென்னைக்கு 2 நாள்கள் மட்டுமே ரயில் சேவை’ என ரயில்வே துறை அறிவித்துள்ளது
 
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் இன்று முதல் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. நாடெங்கிலும் பல ரயில்கள் இயக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் சென்னைக்கு இப்போதைக்கு ரயில் சேவை தேவை இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் ரயில்களை இயக்க வேண்டாம் என்று மத்திய உள்துறை, ரயில்வே துறை அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரதமருடான காணொளி உரையின்போது இதனை அவர் வலியுறுத்தியிருந்தார்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று சென்னைக்கு வருகிற 14, 16 ஆகிய 2 தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது. மேலும் சென்னைக்கு டெல்லியில் இருந்து இயக்கப்படும் ராஜ்தானி ரயில் பெட்டி குளிர்சாதன வசதி கொண்டது என்பதும், சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்றும், அந்த பயணிகளை ரயில்வே துறையே தனிமைப்படுத்தி வைக்க முதலமைச்சர் விடுத்த கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்