உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஏற்கனவே முன்னதாக வேறு சில வைரஸ் தாக்குதலுக்கு அளிக்கப்பட்ட மருந்துகளும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எபோலா வைரஸ் தொற்றிற்கு மருந்தாக அமெரிக்க நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துதான் ரெம்டெசிவிர். தற்போது இந்த மருந்து ஓரளவு கொரோனாவை குணமாக்குவதாக கூறப்படுவதால் பல நாடுகள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முன் வந்துள்ளன.
இந்நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்ஹி மருத்துவமனையில் மட்டும் ரெம்டெசிவிர் மருந்தை சோதனை முயற்சியாக நோயாளிகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெம்டெசிவிர் மருந்து 31% கொரோனா நோயாளிகளை குணமாக்குவதாக அமெரிக்க சுகாதார துறை தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியில் ரெம்டெசிவிர் நல்ல பலனை கொடுத்தால் பரவலாக அது பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.