ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு- தினகரன்

வியாழன், 9 மார்ச் 2023 (16:23 IST)
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால்  பணமிழந்த பலர் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். இது அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஆளுங்கட்சியினர், எதிர்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 10.06.2022 அன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி ஒரு  ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைப்பட்டது, அக்குழு தன் அறிக்கையை 27.06.22 அன்று முதலமைச்சரிடம் அளித்தனர்.

அதன்பின்னர், ஆன்லைன் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த கவர்னர்  அதற்கான சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆன்லைன் சூதாட்ட மசோதாவை ஆளுனர் ஆர்.என்.ரவி இரண்டாவது முறையாக அரசுக்கு திரும்பி அனுப்பியுள்ள்ளார்.

இதுகுறித்து, அமமுக பொ.செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட மசோதாவை ஆளுநர் இரண்டாவது முறையாக மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இளைஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரை அடிமைப்படுத்திய ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

 மக்களின் உயிரோடும், சமுதாய நலத்தோடும் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தமிழக அரசும், ஆளுநரும் இணைந்து சட்டமசோதா விரைவில் அமலுக்கு வருவதற்கு வழிவகுப்பது மட்டுமே இன்றைய சூழலுக்கு அவசர அவசிய தேவையாகும்.’’என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்